இனி ரொம்பவே ஈஸி; சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே.. 4 டூ 6 டூ 8 அப்கிரேட் - அசத்தல் திட்டம்!
எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டத்தை அப்கிரேட் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை - பெங்களூரு
சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த மதிப்பு என்பது சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய். இந்த சாலையின் நீளம் என்பது 260.85 கிலோமீட்டர். இந்த சாலையில் 162 மேம்பாலங்கள், 4 ரயில்வே கிராஸிங்குகள், 52 எக்ஸ்பிரஸ்வே சுரங்க வழித்தடங்கள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன.
அப்கிரேடு திட்டம்
தற்போது முழுவதும் 4 வழிச் சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. அதுவும் வழியில் அமைந்துள்ள சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கு செல்லும் வகையில் பிரத்யேக இணைப்பு சாலைகள் அமைக்கப்படுகின்றன.
2025ல் 4 வழிச் சாலையாக பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் 6 வழிச் சாலையாகவும், 15 ஆண்டுகளில் 8 வழிச் சாலையாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.