ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம் - பயணிகளே.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

Indian Railways
By Sumathi Nov 29, 2024 08:00 AM GMT
Report

ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு

ரயிலில் டிக்கெட் முன்பதிவில், நபரால் பயணம் செய்ய முடியாமல் போனாலோ அல்லது பயண தேதி மாறி போனாலோ அந்த டிக்கெட்டை ரத்து செய்வது மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளது.

railways reservation

இந்நிலையில், முன்பதிவு செய்த நபர் பயணிக்க முடியாமல் போனால் தனது குடும்பத்தில் வேறு ஒருவர் பயணிக்க ஏதுவாக பெயர் மாற்றம் செய்யும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. மேலும், குழுவாக செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் அதில் ஒரு நபரின் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.

இனி.. நண்பர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் கடும் தண்டனை - அமைச்சகம் உத்தரவு!

இனி.. நண்பர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் கடும் தண்டனை - அமைச்சகம் உத்தரவு!

ரயில்வே அறிமுகம்

ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து 24 மணி நேரத்துக்கு முன்பு அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு சென்று விண்ணப்பம் மற்றும் அடையாள அட்டைகளின் நகல் கொடுத்து இந்த சேவையை பெறலாம். பயணத் தேதியையும் ரயில் நிலையத்தில் விண்ணப்பம் கொடுத்து வேறு ஒரு தேதியில் மாற்றி புதிய டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

irctc

குறிப்பாக ரயில் நிலைய கவுன்டர்கள் மூலம் முன் பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த 2 புதிய சேவைகளும் பொருந்தும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.