சந்திர கிரகணம்: எங்கு, எப்போது தெரியும்? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சந்திர கிரகணத்தால் கோவில்களில் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
சந்திர கிரகணம்
ஐப்பசி பவுர்ணமி தினமான இன்று நள்ளிரவில் 1:05 மணிக்கு துவங்கி 2:24 மணிக்கு முடியும். கிரகணத்தின் காலம் 1 மணி நேரம் 19 நிமிடங்கள் இருக்கும். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இதை பார்க்க முடியும்.
மேலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட கிழக்கு அரைக்கோளத்தின் சில பகுதிகளில் தெரியும். இதனை வெறும் கண்களில் பார்க்கலாம்.
சந்திர கிரகண நேரம் தோஷ காலமாக கருதப்படுவதால் பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் ஜோதிடத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதில் லாப முகத்தை காணப்போகும் 3 ராசிகள் உள்ளன.
யாருக்கு அதிர்ஷ்டம்
மிதுனம்: நீண்ட நாட்களாக தடைப்பட்ட வேலைகள் இந்த நேரத்தில் முடியும். சமூகத்தில் மதிப்புகள் கூடும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும்.
கடகம்: நிதி நிலைமை மேம்படும். நல்ல யோகத்தால் சொத்து அல்லது கார், வீடு வாங்கலாம். முழு குடும்ப ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.
மகரம்: பல நாட்களாக நீங்கள் செய்யும் திட்டத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். செல்வம் பெருகும்.

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
