வருடத்தின் முதல் சந்திர கிரகணம்; என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது?

Astrology
By Sumathi May 03, 2023 04:47 AM GMT
Report

2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி நிகழ உள்ளது.

சந்திர கிரகணம்

சந்திரன் மற்றும் சூரியனுக்கு நடுவில் பூமிக்கும் வரும்போது, ​​சந்திர கிரகணம் ஏற்படுகிறது. மத நம்பிக்கைகளின்படி, ராகு சந்திரனை நேருக்கு நேராக சந்திப்பதை சந்திர கிரகணம் எனக் கூறப்படுகிறது.

வருடத்தின் முதல் சந்திர கிரகணம்; என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது? | Should Not Do During An Chandra Graham

இந்த சந்திர கிரகணம் 4 மணி 18 நிமிடங்கள் நிகழும். சந்திர கிரகணம் காலை 8:44 மணிக்கு தொடங்கி மதியம் 1:20 மணி வரை நீடிக்கும். இந்த பெனும்பிரல் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். இதைத் தவிர ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்,

வழிமுறைகள்

இந்தியப் பெருங்கடல், வட துருவம் ஆகிய பகுதிகளிலும் தெளிவாக தெரியும். கிரஹணத்தின் போது தியானம் அல்லது தங்களுக்கு பிடித்த கடவுளை பிரார்த்தனை செய்யலாம். வீட்டைச் சுத்தம் செய்து, கோமியம் - மஞ்சள் - வேப்பிலை ஆகியவற்றை கலந்து தெளிப்பது நன்மை பயக்கும்.

வருடத்தின் முதல் சந்திர கிரகணம்; என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது? | Should Not Do During An Chandra Graham

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தவிர மற்றவர்கள் கிரகணத்தின் போது முடிந்தவரை உணவு மற்றும் தண்ணீர் பருகாமல் இருப்பது நல்லது. உணவுப் பொருட்களில் துளசி இலைகளை போடலாம். கிரகணத்திற்குப் பிறகு எப்போதும் குளித்துவிட்டு ஆடைகளை சுத்தம் செய்யுங்கள்.

கிரகணத்தின் போது தூங்குவதையோ குளிப்பதையோ தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதையும் கிரகணத்தைப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். எந்த வகையான சரீர செயல்களிலும் ஈடுபடுவது நல்லதல்ல. 2 மணி நேரத்திற்கு முன்பிருந்தே எந்த வித உணவும் உட்கொள்ளக் கூடாது என ஜோதிடம் மூலம் கூறப்படுகிறது.