2023ம் ஆண்டு நிகழப்போகும் 4 கிரகணங்கள்...! வெளியான முக்கிய தகவல்...!
வரும் 2023ம் ஆண்டு 4 கிரகணங்கள் நிகழப்போவதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சந்திர கிரகணம் -
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதை தான் சந்திர கிரகணமாகும். இந்நிகழ்வு பௌர்ணமி அன்று நிகழும்.
சூரியனின் ஒளி சந்திரன் மீது முழுமையாக விழுந்தால் அது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். சந்திரனின் ஒரு பகுதியை மறைத்தால் அது பகுதிநேர சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.
இந்நிலையில், வரும் 2023ம் ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2 சூரிய கிரகணங்கள், 2 சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளது.
2023ம் ஆண்டின் முதல் கிரகணம்
2023ம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20ம் தேதி நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 7.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 வரை நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் காணப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டின் 2வது கிரகணம்
2023ம் ஆண்டு முதல் சந்திர கிரகணம் மே 5ம் தேதி நிகழ உள்ளது. இது சூரிய கிரகணத்திற்கு 15 நாட்களுக்குப் பிறகு ஏற்பட உள்ளது. இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணம் இரவு 8.45 மணிக்கு தொடங்கி அதிகாலை 1 மணிக்கு முடிவடைய உள்ளது.
2023ம் ஆண்டின் 3வது கிரகணம்
2023ம் ஆண்டின் 2வது சூரிய கிரகணம் அக்டோபர் 14ம் தேதி நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் காணப்படாது. இது மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் காணப்பட உள்ளது.
2023ம் ஆண்டின் 4வது கிரகணம்
2023 ஆம் ஆண்டின் 4-வது கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 29ம் தேதி நிகழ உள்ளது. இந்த 2வது சந்திர கிரகணம் இந்திய நேரப்படி அதிகாலை 1:06 மணிக்கு தொடங்கி மதியம் 2:22 மணிக்கு முடிவடையும். இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் காண முடியும்.