பாகிஸ்தான் செல்லும் இந்திய அணி?8 ஆண்டுகளுக்கு பின்.. பிசிசிஐ எடுத்த முடிவு!
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பிசிசிஐ தரப்பில் அட்டவணை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டிராபி தொடர்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்கவுள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா vs பாகிஸ்தான்
குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அரசியல் காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிசிசிஐ தரப்பில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பிப்.20ஆம் தேதி இந்தியா - வங்கதேசம் போட்டியும், பிப்.23ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்து போட்டியும்,
மார்ச் 1ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி அனைத்தும் லாகூர் மைதானத்திலேயே நடத்த பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், இந்திய அணி வீரர்கள் நிச்சயம் பாகிஸ்தான் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.