அவர் பேட்டில் ஆடி தான் சதமடித்தேன் - சீக்ரெட் உடைத்த அபிஷேக் சர்மா!
அபிஷேக் சர்மா 2வது போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
IND vs ZIM
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 100 ரன், ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன், ரிங்கு சிங் 48 ரன் எடுத்தனர்.
அபிஷேக் பேட்டி
இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் சதமடித்தது குறித்து பேசியுள்ள அபிஷேக் சர்மா,
இன்றைய இன்னிங்ஸை சுப்மன் கில் பேட்டில் தான் விளையாடினேன். இதற்கு முன்பாகவும் கில் பேட்டில் விளையாடி இருக்கிறேன்.
எப்போதெல்லாம் ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்போதெல்லாம் அவரின் பேட்டில் தான் விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.