சாலையில் ரீல்ஸ் எடுத்த பெண்; பைக்கில் வந்த நபர் செய்த காரியம் - அதிர்ச்சி சம்பவம்!
சாலையில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த பெண்ணிடம், நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயின் பறிப்பு
உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சாலையில் பெண் ஒருவர் சாலையில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றுள்ளார்.
இந்த செயின் பறிப்பு சம்பவம் முழுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் 6 சவரன் தங்கச் சங்கிலியை இளைஞர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.