முஸ்லீம் குடும்பம் மீது 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் எழுப்பி ஹோலி கலர் பொடி தூவி துன்புறுத்தல் - வைரல் Video!
முஸ்லீம் குடும்பத்தின் மீது சிலர் வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவி துன்புறுத்தியுள்ளனர்.
துன்புறுத்தல்
உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் பைக்கில் சென்ற ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது சிலர் வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவி, தண்ணீர் ஊற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் "இளைஞர்கள் சிலர் பைக்கில் அமர்ந்திருந்த வாலிபர் மற்றும் பெண் ஆகியோரின் முகத்தில் வலுக்கட்டாயமாக கலர் பொடியை பூசுகின்றனர். பின்னர் மூவரின் மீதும் தண்ணீரை தலையில் ஊற்றி துன்புறுத்துகின்றனர்.
ஒருவர் கைது
பின்னர் அந்த இளைஞர்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புகின்றனர். இது தொடர்பான போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த சம்பவம் மார்ச் கடந்த 20-ம் தேதி பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்தது தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அனிருத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோவில் உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
The video from Bijnor shows a group of men forcefully applying Holi colours to a Muslim man and two women while harassing them amid religious chants. This is what happens when a chief minister openly flaunts his bigotry towards minorities. pic.twitter.com/qZOJsJN0J0
— Ismat Ara (@IsmatAraa) March 24, 2024