தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு தடை போட்ட மத்திய அரசு : காரணம் என்ன?
13 மாநிலங்கள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தும் வரை மின் பரிமாற்ற தளங்களில் வாங்குவது மற்றும் விற்பது தடை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மின் தடை
அதன்படி, தமிழ்நாடு , தெலுங்கானா,மத்தியப் பிரதேசம் , மணிப்பூர், மிசோரம், ஜார்க்கண்ட், பீகார், ஜம்முகாஷ்மீர்,ராஜஸ்தான் ,ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா,கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் மின்சாரங்களை மின் பரிமாற்ற தளங்களில் வாங்குவது மற்றும் விற்பது தடை என மத்திய அரசு தெரிவித்துள்ளது .
5,100 கோடி பாக்கி
5,100 கோடி மதிப்புள்ள பில்களை செலுத்தத வேண்டியுள்ளதால் இந்த தடை உத்தரவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது, மேலும்இவ்வாறு ஒட்டுமொத்தமாக 12க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒன்றாக தடை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
மின்சாரத்தை மாநிலங்களுக்கு இடையேபகிர்வதில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.