பராமரிப்பு பணிகளுக்கான மின்சார ’ஷட் டவுன்’ நேரம் குறைப்பு...மின்சார வாரியம் அதிரடி...
TNEB
Power shut down
By Petchi Avudaiappan
பராமரிப்புப் பணிக்கான மின்சார சேவை நிறுத்தப்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். எனவே 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் கிடைக்க தமிழக மின்சார வாரியமும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும் நேரம் குறைக்கப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை நிறுத்தம் செய்வதற்கு பதில் பகல் 12 மணிக்குள் ஏதாவது இரண்டு மணிநேரம் பராமரிப்புப் பணிக்கு மின்சாரம் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.