ஆதார் சட்ட விதிமுறையில் திருத்தம்; என்ன தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..
ஆதார் சட்ட விதிமுறைகளில் அரசு திருத்தம் செய்துள்ளது.
ஆதார் சட்ட விதிமுறை
ஆதார் கார்டில் உள்ள விவரங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த ஆதார் சட்டத்தின் 57ஆவது பிரிவு அனுமதி வழங்கியது. ஆனால் அது தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இந்நிலையில் ஆதார் சட்டம் 2016ல் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அரசு திருத்தம்
அதன்படி, ஆதார் விவரங்களை பயன்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங்கள், அதற்கான தேவை குறித்த விவரங்களுடன் மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். விண்ணப்பங்களை பரிசீலித்து மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில்,
தங்கள் சேவைகளுக்காக தனிநபர்கள் அளிக்கும் ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்கள் சரிபார்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன் மூலம், தனியார் நிறுவனங்களின் வர்த்தகம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் தங்கு தடையின்றி பெற முடியும் என அரசு விளக்கமளித்துள்ளது.