ChatGPT போல் இந்தியாவுக்கு தனி AI Model - சீனா சவாலுக்கு அரசு பதிலடி!
இந்தியா ஏ.ஐ., மாடலை உருவாக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஏ.ஐ.,
சீனா டீப்சீக் என்ற இரண்டு ஏ.ஐ., மாடல்களை குறைந்த செலவிலான சேவையாக அறிமுகம் செய்துள்ளது. இதனால் அமெரிக்காவின் ஓபன் ஏ.ஐ., என்விடியா ஆகிய நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன.
உலக நாடுகளிடையே தற்போது AI War கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் இதுகுறித்து பேசுகையில், “இந்தியாவின் முதல் ஏஐ மாடலை உருவாக்க கடந்த ஆண்டு மார்ச் மாதமே பிரதமர் மோடி அனுமதி வழங்கிவிட்டார்.
அமைச்சர் தகவல்
இந்தியாவின் ஏஐ திட்டத்தை CCF (Common Compute Facility) அடிப்படையில் உருவாக்கி வருகிறோம். அடிப்படையில் 10 ஆயிரம் ஜிபியு இலக்குகளை நிர்ணயித்த நிலையில் தற்போது 18,693 ஜிபியுக்களை பட்டியலிட்டுள்ளோம். இதை வைத்து விவசாயம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட 18 செயலிகளை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் 8 முதல் 10 மாதங்களுக்குள் இந்த ஏஐ தயாராகி விடும்” என அவர் கூறியுள்ளார். உலக அளவில் பெரும் போட்டி போடும் Trained AI Modelகளுக்கு இந்தியாவின் ஏஐ ஈடுகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.