5 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரிப்பு.. Credit Card பயன்பாடு - ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரிப்போர்ட்!

HDFC Bank India Reserve Bank of India
By Vidhya Senthil Jan 29, 2025 09:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 5 ஆண்டுகளில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு 2 மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கிரெடிட் கார்டு

அவசர தேவைக்காக மட்டுமே கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் பழக்கம் முன்பு இருந்தது. ஆனால் கையில் இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் சாதாரண மளிகைக் கடையில் கூட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துவிட்டது.

கிரெடிட் கார்டு

இதனைப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதோடு மட்டுமில்லாமல் தங்கு தடையற்ற முறையில் பணம் செலுத்தும் வாய்ப்புகளும் இருப்பதால், மளிகைப் பொருட்கள் வாங்குவது முதல் நகைகள் வாங்குவது வரை எனப் பல பணப் பரிவர்த்தனைகளுக்கும் கிரெடிட் கார்டுகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஆன்லைன் ஷாப்பிங்; இனி ஆர்டரை கேன்சல் செய்ய கூடுதல் கட்டணமா?

ஆன்லைன் ஷாப்பிங்; இனி ஆர்டரை கேன்சல் செய்ய கூடுதல் கட்டணமா?

இந்த நிலையில் 5 ஆண்டுகளில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு 2 மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 24 டிசம்பரில் 10 கோடியே 80 லட்சம் கிரெடிட் கார்டுகள் புழக்கத்திலிருந்து வருகிறது.

ரிசர்வ் வங்கி

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் 80 கோடியே 53 டெபிட் கார்டுகள் இருந்த நிலையில் 2024 டிசம்பரில் 99 கோடியே 9 லட்சமாக அதிகரித்தது. இதனையடுத்து 2013 ஆம் ஆண்டு 772 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 222 கோடி எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் நடந்தது.

Credit Card

இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 758 லட்சம் கோடி முதல் 20 ஆயிரத்து 787 கோடி வரை பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும் ரிசர்வ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த 5 கோடியே 53 லட்சத்தை விட சுமார் 2 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.