இதை செய்யாவிட்டால் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது - இன்று முதல் புதிய விதி
UPI பரிவர்த்தனையில் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனை
டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மனிதரை காண்பது அரிதிலும் அரிது. குண்டூசி வாங்குவதில் இருந்து தங்கம் வாங்கும் வரை ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மக்கள் மாறி விட்டனர்.
Google pay, PhonePe போன்ற யுபிஐ செயலிகள் மூலம் நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது, யுபிஐ பரிவர்த்தனைகளை நெறிப்படுத்தும் வகையில் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன், புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறப்பு குறியீடுகள்
இதன்படி உங்கள் UPI ஐடியில் A முதல் Z வரை உள்ள எழுத்துகள் மற்றும் 0-9 வரை உள்ள எண்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும். @,#,%,& உள்ளிட்ட சிறப்பு குறியீடுகள் இருக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. UPI ஐடியில் சிறப்பு குறியீடுகள் இருந்தால் பணப்பரிவர்த்தனை தானாகவே தோல்வியில் முடியும்.
இதனை தவிர்க்க உங்கள் UPI செயலியில் தற்போது நீங்கள் பயன்படுத்தும் UPI ஐடி தவிர்த்து கூடுதலாக 3 UPI ஐடிகள் வழங்கப்பட்டிற்கும். அதில் சிறப்பு குறியீடுகள் இடம்பெறாத ஐடியை Activate செய்ய வேண்டும். இந்த விதி இன்று(01.02.2025) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.