இனி மற்ற UPI செயலிகள் தேவை இல்லை; Whatsapp மூலம் பணம் அனுப்பலாம் - எப்படி?
Whatsapp Pay க்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இனி வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்ப முடியும்.
UPI சேவை
டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மனிதரை காண்பது அரிதிலும் அரிது. குண்டூசி வாங்குவதில் இருந்து தங்கம் வாங்கும் வரை ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மக்கள் மாறி விட்டனர்.
Google pay, PhonePe, Paytm போன்ற செயலிகள் இந்த UPI சேவையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் மூலம் QR Code ஸ்கேன் செய்து நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.
Whatsapp Pay
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் 500 மில்லியனுக்கு அதிகமான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், 2020 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் செயலியும் UPI சேவையில் கால் பதித்தது.
ஆனால் 40 மில்லியன் மக்களுக்கு மட்டுமே யுபிஐ சேவையை வழங்கவேண்டும் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) கட்டுப்பாடு விதித்தது. 2022 ஆம் ஆண்டு இந்த கட்டுப்பாட்டை 100 மில்லியனாக தளர்த்தியது.
இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் செயலிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மொத்தமாக நீக்கியுள்ளது NPCI. இனி வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும், வாட்ஸ்அப் மூலமாகவே பணம் அனுப்ப முடியும்.
பணம் அனுப்புவது எப்படி?
வாட்ஸ்அப்பில் மேல உள்ள 3 டாட்டை தொடுவதன் மூலம் வரும் ஆப்சனில் payment என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் continue என்பதை கிளிக் செய்து தோன்றும் வங்கிகளின் பட்டியலில் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் போன்நம்பரில் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வேண்டும். அந்த சிம் உங்கள் செல்போனில் இருக்க வேண்டும்.
அதன் பின்னர் verify என்பதை தேர்வு செய்தால் உங்கள் வங்கி கணக்கு வாட்ஸ்அப் உடன் இணைக்கப்படும். அதன் பின்னர் மற்ற UPI செயலிகளை போல் ஸ்கேன் செய்து பணம் அனுப்புவது, UPI ID க்கு பணம் அனுப்புவது, போன்ற வழக்கமான upi செயலிகளை வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ள முடியும்.
வாட்ஸ்அப் உபயோகிப்பவருக்கு பணம் அனுப்ப வேண்டுமெனில் அவரது சேட்டை திறந்து, அதில் கீழே ₹ என்பதை கிளிக் செய்து அனுப்ப வேண்டிய தொகையை உள்ளிட்டு பணம் அனுப்பலாம்.
எச்சரிக்கை
டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை உங்கள் சொந்த கணினியை தவிர பிரௌசிங் சென்டர் அல்லது வேறு எங்கும் வாட்ஸ்அப்பை லிங்க் செய்ய வேண்டாம். லிங்க் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் பயன்படுத்தி விட்டு உடனடியாக Signout செய்து விடவும்.
உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டை வேறு யாரிடமும் கொடுக்க வேண்டும். அவரது போனில் உங்கள் நம்பர் மூலம் வாட்ஸ்அப் செயலியை திறந்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது.