ஒரே அடிதான்; மனிதர்களை கொல்லும் காசோவரிகள் - உலகின் ஆபத்தான் பறவை!
உலகின் அதிக ஆபத்தான பறவை காசோவரிகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
காசோவரி
காசோவரி (Cassowary) எனப்படும் பறவை உலகின் மிகவும் ஆபத்தான பறவையாகக் கருதப்படுகிறது. மனிதர்களையே கூட கொன்றுவிடும் அளவுக்கு ஆபத்தாம்..
ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவின் வெப்பமண்டல மழை காடுகளில் வாழ்கின்றன. நீல முகம், தலைக்கவசம் போன்ற உறுப்பு மற்றும் பயங்கர கூர்மையான நகங்களுடன் இவை 310 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இது ஒரு சராசரி மனிதனின் உயரத்திற்கு வளரும்.
ஆபத்தான பறவை
காசோவரிகள் தனிமையை விரும்பக்கூடியவை. பெரும்பாலும் மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும். ஆனால், தாக்கத் தொடங்கினால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பெரிய பறவைகள் பறக்க முடியாவிட்டாலும், நம்பமுடியாத அளவுக்கு வேகமாக ஓடும்.
இது மணிக்கு 50 கிமீ வேகத்தில் கூட ஓடும் திறனைக் கொண்டுள்ளது. சில பழங்குடியின கலாச்சாரமான பாரம்பரிய நடனங்கள், சடங்குகள் மற்றும் இரவு நேரக் கதைகளில் காசோவரிகளுக்கு முக்கிய இடம் உள்ளது. கிழக்கு நுசா தெங்கரா, மாலுகு தீவுகள் மற்றும் வடகிழக்கு ஆஸ்திரேலியாவிலும் கண்டறியப்படுகிறது.
தற்போது இதன் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இதைக் காப்பாற்றச் சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.