இலங்கை அதிபர் மாளிகை பதுங்கு குழியில் கட்டு கட்டாக பணம்! பரபரப்பு வீடியோ!

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan political crisis Sri Lanka Food Crisis
By Sumathi Jul 10, 2022 09:29 AM GMT
Report

தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள இலங்கை அதிபர் மாளிகையில் இருந்த பதுங்கு அறையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கிடைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் மாளிகை

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, அவருக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில்,  போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியது.

srilanka

அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்பு வீரர்களை மீறி அதிபர் மாளிகைக்குளும் நுழைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்து போராட்டக்காரர்கள் விலகியதல், முழுவதுமாக போராட்டக்காரர்கள் வசமானது அதிபர் மாளிகை.

 தொடர் போராட்டம்

இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் தப்பியோடினார். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரகள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டிற்கும் தீ வைத்தனர்.

இதனையடுத்து நேற்று மாலை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உடனே பதவி விலக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பதுங்க குழி

இதனையடுத்து பதவி விலகுவதாக அதிபரும், பிரதமரும் அறிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டும், படுக்கையறை , சமையலறை, அலுவலக அறை என அனைத்திலும் நுழைந்து ஆராய்ந்துள்ளனர்.

இலங்கை அதிபர் மாளிகை பதுங்கு குழியில் கட்டு கட்டாக பணம்! பரபரப்பு வீடியோ! | Cash In The Bunker In The Presidents House

அப்படி அலமாரிகள் போன்ற வடிவமைப்பில், ரகசிய அறைகள், பதுங்கு குழிகள் போன்றவை இருப்பதை கண்டறிந்தனர்.அப்படியாக அதிபர் மாளிகையில் உள்ள பிரத்தியேக கட்டிடம் ஒன்றில் , இந்த பதுங்க குழி இருக்கின்றது எனவும்,

 கட்டு கட்டாக பணம்

இந்த பதுங்க குழிகளுக்குள் வெவ்வேறு அலமாறி கதவுகள் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறையில் கட்டு கட்டாக , கோடிக்கணக்கில் பணம் இருந்ததாகவும்

அதனை போராட்டக்காரர்கள் எண்ணி அதிபர் மாளிகையில் உள்ள பொறுப்பான அதிகாரியிடம் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நாட்டின் முதல் திருநம்பி விமானி... விமானம் ஓட்ட தடை! ஏன் இந்த நிலை?