கப்பல் மூலம் தப்பிச் சென்ற கோத்த பய ராஜபக்சே - வைரலாகும் பரபரப்பு வீடியோ
இலங்கை பொருளாதாரம்
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு
கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிபர் கோத்த பய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, இலங்கையில் நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை 7 பிரதேசங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருந்தது.
இலங்கை அதிபர் மாளிகை சூறையாடல்
கோத்த பய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியில் இருந்து விலகி உள்ளனர் இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை கொள்ளும் ஆவேசமாக பிரவேசித்து உள்ளனர் , இதனையடுத்து அதிபர் கோட்டபய தப்பி ஒடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோத்த பய ராஜபக்சே தப்பியோட்டம்
இலங்கை அதிபர் கோத்த பய ராஜபக்சே அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்ட ஆயிரக்கணக்கானோர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டதையடுத்து தப்பியோடியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மிகப்பெரிய போராட்டம் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் நடைபெற்று வரும் நிலையில், கோத்தபய ராஜபக்ச பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகங்கள் மாணவர் பேரவை இதனைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை கடற்படையின் SLNS கஜபாஹு கப்பலில் கோத்தபய ராஜபக்சவின் கொழும்பு துறைமுகத்திலிருந்து தப்பியோடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
Video footage from the Colombo Port of Gotabaya Rajapakse allegedly boarding SLNS Gajabahu Vessel of Sri Lanka Navy.
— Ravindu Thimantha Gamage (@IamRavindu) July 9, 2022
Video Credits : Sanka Vidanagama#OccupyPresidentsHouse✊ #GotaGoHome #ProtestsLK pic.twitter.com/NydWarmRDH