இலங்கை அதிபர் மாளிகையில் சமைத்து சாப்பிட்ட போராட்டக்காரர்கள் - வைரலாகும் வீடியோ
இலங்கை பொருளாதாரம்
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிபர் கோத்த பய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, இலங்கையில் நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை 7 பிரதேசங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருந்தது.
இலங்கை அதிபர் மாளிகை சூறையாடல்
கோத்த பய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியில் இருந்து விலகி உள்ளனர் இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை கொள்ளும் ஆவேசமாக பிரவேசித்து உள்ளனர் , இதனையடுத்து அதிபர் கோட்டபய தப்பி ஒடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நீச்சல் குளத்தில் குளியல் போட்ட போராட்டக்காரர்கள்
கோத்த பய ராஜபக்ஷேவின் மாளிகையை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், அங்கிருந்த பெரிய நீச்சல் குளத்தில் துள்ளி குதித்து உற்சாகமாக குளியல் போட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதிபர் மாளிகையில் சமைத்து சாப்பிட்ட போராட்டக்காரர்கள்
தற்போது, கோத்த பய ராஜபக்ஷேவின் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டுள்ளனர். மேலும், அங்கிருந்த காய்கறிகளை எடுத்து சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Protestors explore the kitchen at President’s House. pic.twitter.com/6nI90PdWvo
— DailyMirror (@Dailymirror_SL) July 9, 2022