கலவரமான கலெக்டர் ஆபீஸ்.. அடிதடியில் ஈடுபட்ட அமைச்சரின் அசிஸ்டன்ட் - ஆட்சியர் அதிரடி!
ஆட்சியர் அலுவலகத்தில் அடிதடி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று கிரானைட் கல் குவாரி ஏலம் நடைபெற்றது. இதனை குத்தகைக்கு எடுப்பதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது இரண்டு பிரிவினர் விண்ணப்பம் தாக்கல் செய்ய வந்தனர்.
அந்த சமயத்தில் இரண்டு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டனர். மற்ற கட்சியினர் கல் குவாரி குத்தகைக்கு விண்ணப்பிப்பதை தடுத்து ஆளுங்கட்சியினர் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்சியர் அதிரடி
இந்நிலையில், இந்த கலவர சத்தத்தை கேட்டு வந்த ஆட்சியர் கற்பகம் தகராறில் ஈடுபட்டவர்களை எச்சரித்து உடனடியாக வெளியேற உத்தரவிட்டார். தொடர்ந்து நேற்று நடைபெறவிருந்த ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.
மேலும், பிற கட்சியினர் விண்ணப்பிப்பதை தடுத்து தகராறில் ஈடுபட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.