நீட் ரத்து செய், கைதிகளுக்கு விடுதலை கொடு.. கோஷம் போட்ட ரவுடி வினோத் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ரவுடி வினோத்திற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெட்ரோல் குண்டு
கடந்த 25-ம் தேதி கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை. அவசரமாக கைது, ஆஜர், சிறை என பின்னணியை தவிர்க்கும் வகையில் நடப்பதாக குற்றம்சாட்டியது.
ஆனால் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தலைமையிலான போலீசார் செய்தியாளர்கள் சந்திப்பில், சிசிடிவி காட்சிகளை பகிர்ந்து விளக்கமளித்தார். மேலும், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். ரவுடி கருக்கா வினோத் மீது குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பல குற்றச்சாட்டுகள் உள்ளது.
நீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில், இன்று புழல் சிறை அதிகாரிகள் பலத்த போலீஸ் காவலுடன் கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை கோர்ட்டின் 9-வது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்த வந்தனர். அப்பொழுது அவர், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும்" என்று செய்தியாளர்களை நோக்கி பேசியபடியே சென்றார்.
இவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம், 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து கிண்டி போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.