என்கவுண்டர் வேணாம், குண்டர் சட்டமே போதும்: படப்பை குணா
என்கவுண்டர் வேண்டாம் குண்டர் சட்டமே போதும் சரணடைந்த ரவுடி குணா.
கொலை கொள்ளை, என பல்வேறு குற்ற வழக்கில் சிக்கி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
காஞ்சிபுரம் கோயில் நகரமாக இருந்து வரும் பட்டுக்கு தனித்துவம் கொண்ட ஊர்.
இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக ரவுடிகளின் அட்டகாசமும் கட்டப்பஞ்சாயத்தும் தொடர்ந்து காவல்துறைக்கு நெருக்கடியைக் கொடுத்து வந்துகொண்டு இருக்கிறது.
காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெருமந்தூர் ஒரகடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் மிரட்டி பணம் வசூலித்தல் , அடிதடி , கட்டப்பஞ்சாயத்து போன்றவைதான் ரவுடிகளின் தொழிலாகவே அங்கு அமைந்தது.
இதன்காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிற்சாலைகளுக்கு பெரும் தொல்லையாக இருந்ததால், தமிழக அரசுக்கு புகார் கொடுத்தனர்.
புதிதாக தொழிற்சாலைகள் இங்கு வருமா என்பதே சந்தேகம் ஆகும் சூழலை உருவாக்கியது.
இதனைத் தடுக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரையை தமிழக அரசு நியமித்தது தன் 25 வருட சர்வீஸில் 12 என்கவுன்ட்டர்கள் நடத்தியவர் வெள்ளத்துரை.
சந்தனக் கடத்தல் வீரப்பன் முதல் அயோத்திகுப்பம் வீரமணி வரை!-
அயோத்திக்குப்பம் வீரமணி என்கவுன்ட்டர், சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டர் உள்ளிட்ட பலரின் என்கவுன்ட்டர் ஆபரேஷன்களில் வெள்ளத்துரை பணியாற்றியிருக்கிறார் என்பதை ஊடகங்கள் வாயிலாகவும்
தன் ரவுடி நட்பு வட்டராம் வாயிலாகவும் அறிந்த காவல்துறையினரால் தேடப்பட்ட ரவுடி படப்பை குணா, என்கவுன்ட்டருக்கு பயந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக அரசு நிலங்களை ஆக்கிரமித்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களையும் மீட்டனர்.
படப்பை குணாவின் கூட்டாளிகளையும் கைது செய்து நடவடிக்கை தொடர்ந்து வந்தது. காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிபாளர் சுதாகர் இதில் தனி கவனம் எடுத்து களம் இறங்கியதும் மேலும் சில ரவுடிகளை அச்சுறுத்தியது.
படப்பை குணா சென்னை புழல் சிறையில் உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அறிவுறுத்தலின்படியும் படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.