பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏன் வருகிறது தெரியுமா? பெற்றோர்களே கவனம்..
குழந்தைகளுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு மாரடைப்பு
குழந்தைகளுக்கும் மாரடைப்பு வரும் செய்திகள் அண்மையில் அதிகரித்து வருகிறது. இது பெற்றோர்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் என பள்ளி செல்லும் குழந்தைகள் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஒரே நாளில் ஏற்படுவதில்லை.
அறிகுறிகள்
பிறவியில் அவர்களுக்கு இதயம் தொடர்புடைய பிரச்சனைகள் இருக்கலாம். மயக்கம், மார்பில் வலி, மூச்சுத் திணறல், கால்விரல் மற்றும் நகங்கள் நீல நிறமாகுதல் போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் ஏற்பட்டால், பெற்றோர்கள் அதனை அலட்சியப்படுத்த வேண்டாம்.
குழந்தைகள் தங்களுடைய உபாதைகளை தெரிவிக்கும் போது முறையாக பரிசோதிக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் வலிகள், வித்தியாசமான அறிகுறிகள் ஏற்படும் போது அதை பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என கற்றுக் கொடுப்பது அவசியம். பள்ளியிலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.