இரவில் தூக்கம் வரவில்லையா? இதை மட்டும் செய்து பாருங்க
இரவில் நல்ல தூக்கத்தை பெற சில டிப்ஸ்களை பார்ப்போம்.
நல்ல தூக்கம்
இரவில் தூக்கம் வராமல் அவதிப்படும் பிரச்சனை பலருக்கும் உள்ளது. ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு இரவு தூக்கம் மிக முக்கியம். எனவே, நல்ல தூக்கத்தை பெற என்ன செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.
ஜாதிக்காய் தூளை பாலில் கலந்து குடிப்பதால் மன அமைதி கிடைத்து தூக்கம் நன்றாக வரும். ஜாதிக்காயில் மிரிஸ்டிசின் (myristicin) என்ற சேர்மம் உள்ளது, இது மத்திய நரம்பு மண்டலத்தில் செயல்பட்டு தூக்கத்தை ஊக்குவிக்கலாம்.
அஸ்வகந்தா பொடி நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள ட்ரைஎத்திலீன் கிளைகோல் (triethylene glycol) என்ற வேதிப்பொருள் தூக்கத்தை தூண்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
என்ன செய்யலாம்?
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பசும்பாலில் (சுமார் 200 மிலி) அரை தேக்கரண்டி (சுமார் 2-3 கிராம்) அஸ்வகந்தா பொடியை சேர்க்கவும். கால் தேக்கரண்டிக்கும் குறைவான (சுமார் 1 கிராம்) ஜாதிக்காய் பொடியை சேர்த்து குடிக்கலாம். இந்த கலவையை படுக்கைக்கு குறைந்தது 30-60 நிமிடங்களுக்கு முன்பு குடிப்பது நல்லது.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், மற்றும் ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றும் முன் மருத்துவரை அனுகுவது சிறந்தது.