புற்று நோயால் அவதி; லாட்டரியில் விழுந்த ரூ.100 கோடி பரிசு - எங்கு தெரியுமா?

United States of America Lottery World
By Jiyath May 02, 2024 07:48 AM GMT
Report

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.100 கோடி பரிசு விழுந்துள்ளது. 

பவர் பால் லாட்டரி

லாவோஸ் நாட்டை சேர்ந்த செங்சைபன் (46) என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போர்ட்லேண்ட் பகுதியில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார்.

புற்று நோயால் அவதி; லாட்டரியில் விழுந்த ரூ.100 கோடி பரிசு - எங்கு தெரியுமா? | Cancer Patient Wins 1 3 Billion Powerball Jackpot

அதில் செங்சைபனுக்கு 1.3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.100 கோடிக்கும் மேல்) பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசு தொகை தனக்கு விழும் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

நிலவின் தென்தருவத்தில் பேரதிசயம் - ISRO-வுக்கு காத்திருந்த ஆச்சரியம் - என்ன தெரியமா?

நிலவின் தென்தருவத்தில் பேரதிசயம் - ISRO-வுக்கு காத்திருந்த ஆச்சரியம் - என்ன தெரியமா?

புற்றுநோய் சிகிச்சை 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வரும் செங்சைபன், இந்த பணத்தை தனது சிகிச்சைக்காக பயன்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.

புற்று நோயால் அவதி; லாட்டரியில் விழுந்த ரூ.100 கோடி பரிசு - எங்கு தெரியுமா? | Cancer Patient Wins 1 3 Billion Powerball Jackpot

மேலும், அவர் கூறுகையில் "இப்போது நான் என் குடும்பத்தை ஆசீர்வதித்து எனக்காக ஒரு நல்ல மருத்துவரை பணியமர்த்த முடியும். என் வாழ்க்கை முழுவதுமாக மாறிவிட்டது. இந்த பணத்தை எனது கனவு வீட்டை வாங்குவதற்கும் நான் பயன்படுத்துவேன்" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.