பம்பர் லாட்டரி ரூ. 20 கோடி - சபரிமலைக்கு வந்த தமிழருக்கு அடித்தது அதிர்ஷ்டம்!
புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் கேரள பம்பர் லாட்டரி குலுக்கலில் ரூ.20 கோடி பரிசு வென்றுள்ளார்.
பம்பர் லாட்டரி
கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இந்த லாட்டரியின் ஒரு சீட்டின் விலை ரூ.400 ஆகும்.
இந்த குலுக்கலில் எக்ஸ் சி 224091 என்ற எண் கொண்ட லாட்டரி லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ரூ.20 கோடி விழுந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்பட இந்த லாட்டரியை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியாமல் இருந்தது.
அதிர்ஷ்டசாலி
இந்நிலையில் அந்த நபர் புதுச்சேரியை சேர்ந்த 33 வயதான ஒருவர் என்பதும், சபரிமலைக்கு வந்தபோது அந்த லாட்டரியை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதை அடுத்து கேரள லாட்டரி இயக்குநரகமும் அவரது பெயரை வெளியிட மறுத்துவிட்டது.
இந்நிலையில் நேற்று லாட்டரி இயக்குநரக அலுவலகத்தில், லாட்டரி சீட்டை ஒப்படைத்து அந்த நபர் சான்றிதழ் பெற்றுக் கொண்டார்.
அந்த அதிர்ஷ்டசாலியான அய்யப்ப பக்தருக்கு ரூ.20 கோடி பரிசு தொகையில், வரி நீங்கலாக ரூ.12.60 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.