Saturday, May 10, 2025

விசா திட்டத்தை நிறுத்திய கனடா; தவிக்கும் இந்திய மாணவர்கள் - என்ன காரணம்?

Justin Trudeau India Canada Student Visa
By Sumathi 6 months ago
Report

சர்வதேச மாணவர்களுக்கான விரைவு விசா திட்டத்தை கனடா நிறுத்தியுள்ளது.

விரைவு விசா

கடந்த ஆண்டில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கனடா விசா வழங்கி இருந்தது. தற்போதை நிலவரப்படி 4 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அங்கு படிக்கின்றனர்.

canada fast visa

இதனைத் தொடர்ந்து வெளிநாட்டினர் அதிகம் கனடா வருவதால் அங்கு குடியிருக்க வீடு கிடைப்பது சிரமமாகிவிட்டது. எனவே, சர்வதேச மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

கனடா செல்வதற்காகவே கல்யாணம் - பெண்ணுக்கு பல லட்சங்களை கொட்டும் ஆண்கள்!

கனடா செல்வதற்காகவே கல்யாணம் - பெண்ணுக்கு பல லட்சங்களை கொட்டும் ஆண்கள்!

மாணவர்கள் தவிப்பு

அதன்படி, இந்த ஆண்டு சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வந்த விரைவு விசா நடைமுறையை அரசு நிறுத்தியுள்ளது.

justin trudeau - modi

மேலும், முதுநிலை பட்டப்படிப்பு உள்பட அனைத்து படிப்புகளிலும் சேர வெளிநாட்டு மாணவர்கள் 4 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு மட்டுமே விசா வழங்க உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழி தகுதி தேர்வு நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மாணவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் வேலை பார்ப்பதற்கு வழங்கப்படும் அனுமதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.