இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா - ஏற்கனவே உள்ள 4 எதிரி நாடுகள்

Amit Shah India Canada
By Karthikraja Nov 03, 2024 09:30 AM GMT
Karthikraja

Karthikraja

in கனடா
Report

 இந்தியாவை தனது சைபர் எதிரியாக கனடா அறிவித்துள்ளது.

கனடா

சீக்கிய அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. 

hardeep singh nijjar

இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர். 

முற்றும் மோதல் - இந்தியா மீது பொருளாதார தடையா? கனடாவிற்கு ஆதரவாக அமெரிக்கா

முற்றும் மோதல் - இந்தியா மீது பொருளாதார தடையா? கனடாவிற்கு ஆதரவாக அமெரிக்கா

சைபர் எதிரி

மேலும், காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, மிரட்டல், உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் குற்றஞ்சாட்டினார். 

amitsha

இதனையடுத்து, ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனடா அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

இந்நிலையில் இந்தியாவை தனது சைபர் எதிரியாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையை அந்த நாட்டின் இணையப் பாதுகாப்பிற்கான தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டது.

5வது நாடு

இந்த அறிக்கையில், இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதிரி நாடுகளின் பட்டியலில் சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு 5 வது நாடாக இந்தியாவின் பெயரை சேர்த்துள்ளது.

"இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய கருத்தை உருவாக்குவதற்காக இது போன்று வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். எந்த ஆதாரமும் இல்லாமல் கனடா இத்தகைய குற்றச்சாட்டை எழுப்புகிறது" என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.