கனடா செல்வதற்காகவே கல்யாணம் - பெண்ணுக்கு பல லட்சங்களை கொட்டும் ஆண்கள்!
கனடா செல்வதற்காக மட்டுமே மணமகளை திருமணம் செய்துக் கொள்கின்றனர்.
ஒப்பந்த திருமணம்
கனடா செல்வதற்காக ஒப்பந்த திருமணம் செய்து கொள்ளும் ட்ரெண்ட் தீவிரமாக பரவி வருகிறது. இது தொடர்பான சம்பவங்களில், பெண் IELTS தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு, கனடாவில் அவரது படிப்பு செலவை ஏற்றுக்கொள்ளும் ஆணை மணந்து கொள்கிறார்.
பிறகு, அவர் கனடாவை அடைந்தவுடன், அந்த ஆணையும் அவர் கனடாவுக்கு அழைத்து கொள்ள வேண்டும். இந்த நடைமுறை தற்போது பெரிதளவில் தலைதூக்கியுள்ளது. இதற்கு காரணமாக, பஞ்சாபில் நிலவும் வேலைவாய்ப்பின்மையும், கனடா செல்லும் ஆசையும் தான். குறிப்பிட்ட பெண் கனடாவை அடைந்ததும்,
ஏமாற்றிய மணமகள்
ஆண் மற்றும் பெண்ணின் பார்வையில் உள்ள வித்தியாசங்களால் விஷயங்கள் சிக்கலாகி விடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இங்கு அதிகம் நடக்கும் ஐஇஎல்டிஎஸ் திருமணங்கள் பொதுப் பிரிவில் தான் நடைபெறுகின்றன. முன்னதாக, கவிதா என்ற பெண் தனது மகள் ஸ்வாதியை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒப்பந்த திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, பஞ்சாபை சேர்ந்த ஜக்கி என்பவரின் இளைய தம்பி சவுரப்புக்கு ஒப்பந்தத்தின் படி திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து, ஸ்வாதிக்கு கனடா விசா கிடைத்து அவரும் அங்கு சென்று விட்டார். மூன்று மாதங்கள் கழித்து ஸ்வாதி தனது கணவர் சவுரபையும் அங்கு அழைத்து கொள்வதாக ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் செய்யவில்லை. இதற்கிடையில் சவுரப் உயிரிழந்து விட்டதால் சவுரபின் மூத்த சகோதரர் பல்ஜித்தை திருமணம் செய்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார்.
அதன்பின், மீண்டும் கனடா சென்ற ஸ்வாதி தனது மொபைல் அழைப்புகளையும் ஏற்கவில்லை , அவரையும் கனடா அழைத்து செல்லவில்லை என்று புகாரளிக்கப்பட்டுள்ளது. ஸ்வாதி மற்றும் அவரது தாய் கவிதா தங்களை 45 லட்சம் ஏமாற்றி விட்டதாக புகாரில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.