மக்களவை தேர்தல் ; 4ம் கட்ட வாக்குப்பதிவு - பிரச்சாரம் ஓய்ந்தது!
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு
நாடு முழுவது வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. அதில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய நாட்களில் 2 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 3-ஆம் கட்ட நிறைவடைந்தது. இந்நிலையில் 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் 4ஆவது கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை நடைபெற இருக்கிறது.
ஆந்திர பிரதேசத்தில் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒடிசாவின் முதல் கட்டமாக 28 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.மேலும் மக்களவை தொகுதிகளுக்காக ஆந்திர மாநிலத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகள், தெலங்கானாவில் 17 நாடாளுமன்றத் தொகுதிகள், பிகாரில் 5, ஜார்க்கண்ட்டில் 4,
பிரச்சாரம் ஓய்ந்தது
மத்தியபிரதேசத்தில் 8 தொகுதிகளும் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவை சந்திக்க உள்ளன. மகாராஷ்டிராவில் 11, ஒடிசாவில் 4, உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8, ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளும் இந்த மக்களவை தேர்தலின் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்கின்றன.
இதற்கான தீவிர பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் அந்தந்த முக்கிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டனர்.இந்த நிலையில், 96 தொகுதிகளிலும் மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்தது.

மிதுன ராசியில் குருபகவான்: இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜாக்பாட் உங்க நட்சத்திரம்? Manithan
