மீண்டும் மோடி ஆட்சி வந்தால் மு.க.ஸ்டாலின் சிறைக்கு போவது உறுதி - பகீர் கிளப்பிய கேஜ்ரிவால்!
எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறைக்கு செல்வார்கள் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
கேஜ்ரிவால்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவது வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. அதில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய நாட்களில் 2 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 3-ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது.
இதற்கான தீவிர பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் முக்கிய தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று விடுதலையான நிலையில், இன்று முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், நான் சிறையில் இருந்து 50 நாட்களுக்குப் பிறகு நேராக உங்களைப் பார்க்க வருகிறேன். இப்போதுதான் அனுமன் கோவிலுக்குச் சென்றேன். அனுமனின் ஆசீர்வாதம் எங்கள் கட்சிக்கு உள்ளது. அனுமன் அருளால்தான் நான் இன்று உங்கள் மத்தியில் இருக்கிறேன் என்று கூறினார்.
மோடி ஆட்சி
மேலும், ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகப் பிரதமர் கூறுகிறார்.. ஆனால் நாட்டில் உள்ள திருடர்கள் எல்லாம் பாஜகவில் தான் உள்ளனர்.10 நாட்களுக்கு முன்பு ஒருவரை ஊழல்வாதி, மோசடிக்காரர் என்கிறார்கள். ஆனால், அந்த நபர் பாஜகவில் இணைந்தால் உடன் அவரை துணை முதல்வராக்கி, அமைச்சர் பதவியும் தருகிறார்கள்.
அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சிறைக்கு அனுப்புவார்கள். இது தான் அவர்கள் திட்டம். ஏற்கெனவே நமது அமைச்சர்கள், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜியின் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர்.
மோடி மீண்டும் வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ். , பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே என எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள். இவ்வாறு பகிரங்கமாக பேசியுள்ளார்.