நாடு முழுவதும் தீவிர பிரசாரம்; கெஜ்ரிவாலின் அடுத்த மூவ் - ஆட்டம் காணும் பாஜக!
கெஜ்ரிவால் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, பாஜக தூண்டுதலின் பேரில் இந்த கைது நடவடிக்கை அரங்கேற்றப்பட்டு இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு விசாரணையில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், பிரசாரம் செய்வது ஒன்றும் அடிப்படை உரிமை இல்லை என்றும், இதற்கு முன்பு பிரசாரம் செய்வதற்காக யாருக்காவவும் ஜாமீன் கொடுக்கப்படவில்லை என்று அமலாக்கத்துறை வாதம் செய்தது.
தீவிர பிரசாரம்
இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஜூன் 01 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. அதன்பின், டெல்லி திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் திறந்த வாகனத்தில் பேசிய அவர், சர்வாதிகாரத்தை ஒன்றுபட்டு வீழ்த்த வேண்டும் என்றும் எனக்கு அனுமன் ஆசி எப்போதும் உள்ளது.
நாளை அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் அனுமன் கோயிலில் இருந்து தனது அடுத்த கட்ட நிகழ்ச்சியை தொடர இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
மேலும், கெஜ்ரிவால் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.