விஷப்பாம்புகளை உயிரோடு விழுங்கும் மிருகம்; மருந்தாம்.. எது தெரியுமா?
விஷப்பாம்புகளை அப்படியே உயிரோடு விழுங்கும் மிருகம் குறித்து கேள்விப்பட்டுள்ளீர்களா?
hayam பாதிப்பு
ஒட்டகங்கள் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வாழ்கின்றன. ஆனால், ஒட்டகங்களுக்கு பாம்புகள் உணவாக அளிக்கப்படுகின்றன.
ஏனென்றால் அவற்றிற்கு நோய் தாக்கும் போது பாம்புகள் உணவாக அளிக்கப்படுகிறது. ஒட்டகங்களை தாக்கும் இந்த நோய் hayam என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்படுகையில், தண்ணீர் அல்லது பிற உணவு எடுத்து கொள்வதை ஒட்டகங்கள் நிறுத்தி விடுகின்றன.
மருந்தாகும் பாம்பு
எனவே அதன் உடல் விறைக்கத் தொடங்குகிறது. இதிலிருந்து குணப்படுத்த விஷப்பாம்புவை உணவாக அளிக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஒட்டகத்தின் வாயைத் திறந்து பாம்பை கட்டாயப்படுத்தி உணவாக அளிக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது.
பாம்பு உள்ளே செல்லும் வகையில் ஒட்டகத்தின் வாயில் தண்ணீரும் ஊற்றப்படுகிறது. ஒட்டகத்தின் உடல் முழுவதும் பரவும் விஷத்தின் தாக்கம் நீங்கிவிட்டால், அது பாதிப்புகளில் இருந்து சரியாகிவிடும் எனக் கூறப்படுகிறது.
ஒட்டகங்கள் பாம்பு விஷத்திற்கு எதிரான நோயெதிர்ப்புத் திறனை கொண்டுள்ளதால், உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இது நோயை எதிர்த்துப் போராட உதவுவதாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.