உடலை தூய்மைப்படுத்தும் என தவளை விஷம் குடித்த நடிகை - ஆன்மீக நிகழ்வில் நடந்த பரிதாபம்
உடலை தூய்மைப்படுத்தும் என நம்பி தவளை விஷம் குடித்த நடிகை உயிரிழந்துள்ளார்.
மூட நம்பிக்கை
உலகின் பெரும்பாலான மக்களுக்கு மதம், கடவுள், அது தொடர்பான சடங்குகளில் நம்பிக்கை உண்டு. அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சில சடங்குகளை பின்பற்றுவதால் ஏற்படும் பின்விளைவுகள் அறியாமல், அதை பின்பற்றி உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
வட அமெரிக்காவின் மெக்சிகோ நாட்டை சேர்ந்த சேர்ந்த 33 வயதான நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ்(Marcela Alcazar Rodriguez). இவர் மத நம்பிக்கைகளில் தீவிர நம்பிக்கை கொண்டவர்.
தவளை விஷம்
இவர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி மெக்சிகோவில் உள்ள ஹீலர் டிப்ளமோ பயிற்சி முகம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் உடலில் உள்ள அழுக்கை நீக்கி தூய்மைப்படுத்தும் சடங்கு ஒன்றை நடத்தியுள்ளனர்.
ராட்சத இலை தவளை எனப்படும் அமேசானிய தவளையின் விஷத்தை அருந்துவதன் மூலம் உடலில் உள்ள அழுக்கி நீங்கி தூய்மையாகும் என நம்புகின்றனர். இதற்கு எந்த அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லாத போதும், நடிகை மார்செலா இதை அருந்தியுள்ளார்.
உயிரிழப்பு
இதை பருகிய சிறுது நேரத்தில், அவருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்த போது, இது உடலை தூய்மைப்படுத்துகிறது என கூறி மருத்துவ உதவியை நாட மறுத்து விட்டார்.
நேரம் ஆக ஆக அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ் மரணத்திற்கு மெக்சிகோவில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான மபச்சே பிலிம்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளது. இது போன்ற அறிவியலுக்கு புறம்பான செயல்களை யாரும் செய்ய வேண்டாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.