இப்படியெல்லாம் பாம்புகள் கனவில் வருதா? அப்போ இதை அவசியம் பாருங்க!
கனவில் பாம்புகள் வந்தால் என்ன பலன் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கனவுகள்..
கனவு என்பது ஒவ்வொரு மனிதனும் ஆழ்ந்த தூக்கத்தில் கானும் ஒரு சாதாரண விஷயம்தான். என்றாலும் ஸ்வப்னா சாஸ்திரத்தின்படி, நாம் கானும் ஒவ்வோரு கனவிற்கும் ஒரு குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.
அதில் சில கனவுகளால் வாழ்க்கையில் நல்வழி பிறக்கும். ஆனால் சில கனவுகள் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த வகையில், கனவில் பாம்புகள் வந்தால் என்ன பலன் என்று அறியலாம்.
தலையில் பாம்பு
ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவில் உங்கள் தலையில் பாம்பு இருந்தால் எதிர்காலத்தில் கீர்த்தி,
மரியாதை அதிகரிக்கும். பாம்பு நம்மை விழுங்குவதைப்போல் கணவு கண்டால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பாம்பு கடி
கனவில் பாம்பு கடிப்பதைப்போல் அல்லது வேட்டையாடி கடித்தால் பயப்பட வேண்டாம்.
இதுப்போன்ற கணவுகள் வெற்றிக்கும், எதிரிகளின் தோல்வியின் அறிகுறி என்ன சொல்லப்படுகிறது.
வெள்ளை பாம்பு
நிஜ வாழ்க்கையில் வெள்ளை பாம்புகளை கான்பது மிகவு அரிதான ஒரு விஷயம.
அதுவே கனவில் வந்தால் அதிர்ச்சி அடைய வேண்டாம் ஏனென்றால் அது பணவரவுக்கான அறிகுறியாம். மேலும் எல்லாம் நன்மையே நடக்கும்.
பாம்பு தோல்
நேரில் பாம்பு தோலை உறிக்கும் காட்சி மிகவும் அறிதான ஒன்றாகும். அதுவே கனவில் தன் மேல் பாம்பு தோலை கழற்றுவதை போல் கண்டால் அது நன்மை தான்.
இது போன்ற கனவு உங்களுக்கு சொத்து மற்றும் பண லாபத்தை குறிக்கிறதாம்.
தங்கப் பாம்பு
பொதுவாக கனவில் தங்க நிறத்திலேயோ அல்லது வெள்ளை நிறத்திலேயோ இருக்கும் பாம்பை கனவில் கண்டால் அது ஒரு நல்ல விஷயம் தான்.
இது அதிர்ஷ்டமும், முன்னோர்களின் அருளும் கிடைக்கிறது என்று அர்த்தம்.