இரவு விருந்துக்கு அமலா பாலை அழைத்த தொழிலதிபர் : வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
நடிகை அமலாபால் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மலேசியாவில் நடைபெறுவதாக இருந்த டேஸ்லிங் தமிழச்சி என்கிற கலை நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் பங்கேற்பதாக இருந்துள்ளார்.
அமலாபாலை அழைத்த தொழிலதிபர்கள்
இதற்காக சென்னை தி. நகரில் ஸ்ரீதர் நடத்தி வரும் டான்ஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி எடுத்து வந்துள்ளார். அந்த நேரத்தில் அழகேசன் என்பவர் அமலாபாலிடம் சென்று மலேசியா செல்லும் போது இப்ராகிம் என்பவர் உடன் இரவு உணவு உணவு அருந்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அமலாபால், கடந்த 2018-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் தி.நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். புகாரின்பேரில் ஸ்ரீதர் ,அழகேசன் ,பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர் போலீசார். இதுகுறித்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
மறுப்பு தெரிவித்த நீதி மன்றம்
இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தொழிலதிபர் பாஸ்கரன், ஸ்ரீதரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். எந்த தொடர்பும் இல்லாத தங்களை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சொல்லி தொழிலதிபர்களின் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். அமலாபால் இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இந்த நிலையில் ஏ.எல். விஜய்க்கு மறுமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
கையில் மது பாட்டிலுடன் போஸ் கொடுத்த அமலா பால், இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட புகைப்படம்..