மாமனார் கண் முன்னே நடுவீட்டில் அமலா பால் செய்த காரியம்? - விவாகரத்துக்கு இதுதான் காரணமாம்? - வெளியான தகவல்
இயக்குநர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்த பிறகு நடிகை அமலா பால் செய்த காரியம் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிந்து சமவெளி படம் மூலம் நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இதனையடுத்து, ‘மைனா’, ‘விகடகவி’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘நிமிர்ந்து நில்’, ‘வேலையில்லா பட்டதாரி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
‘தெய்வ திருமகள்‘, ‘தலைவா’ ஆகிய படங்களை ஏ.எல். விஜய் இயக்கினார். அப்போது, அமலாபாலுக்கும் ஏ.எல்.விஜய்க்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அடுத்த 2 ஆண்டுகளிலேயே இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர்.
இந்நிலையில், அமலா பாலுக்கும், ஏ.எல்.விஜய்க்கும் விவாகரத்திற்கான முக்கிய காரணம் குறித்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. நடிகை அமலாபால் திருமணத்திற்கு முன்பே சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். திருமணத்திற்கு முன்பே அமலா பாலுக்கு குடிப்பழக்கமும் அதிகம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகும் அமலா பால், அதையெல்லாம் விடாமல் குடி, நடிகர்களுடன் நைட் பார்ட்டி என உல்லாசமாக இருந்துள்ளார். இது குறித்து, ஏ.எல். விஜய்யின் அப்பா, ஏ.எல். அழகப்பன் உன் மனைவியை கண்டிக்க மாட்டாயா என கேட்டுள்ளார். ஏ.எல்.விஜய்யிடமும் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் ஏ.எல். விஜய், அமலா பாலிடம் எதுவும் கேட்க முடியாமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து, மாமனாரான அழகப்பனுக்கும், அமலா பாலுக்கும் இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது. மாமனார் ஏ.எல்.அழகப்பன் முன்பு, நடு வீட்டில் அமர்ந்து அமலாபால் புகைப்பிடித்துக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து அழகப்பன் அமலாவிடம் கேட்டபோது, என் இஷ்டம், உங்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது என்று பதில் கூறி இருக்கிறார்.
இதனால்தான் ஏ.எல் விஜய்க்கும், அமலா பாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அது விவாகரத்தில் முடிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், நடிகை அமலா பால், பிரபல நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாகவும், அந்த நடிகர் தான் அமலா பாலின் வாழ்க்கை சீரழிக்க காரணம் என்று ஏ.எல் அழகப்பன் ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.