ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 43 பேர் உடல் கருகி பலி - பலர் படுகாயம்!

Bangladesh Fire Accident Death
By Swetha Mar 01, 2024 04:39 AM GMT
Report

ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் 7 மாடிகளை கொண்ட கட்டடத்தில் பலவேறு உணவகங்கள், கடைகள் உள்ளன.

bangladesh fire accident

இந்நிலையில், முதல் தளத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த உணவகத்தில் திடீரென தீ பரவி அடுத்தடுத்த தளங்களும் முழுவதும் பற்றி எரிந்துள்ளது.

திடீரென பற்றி எறிந்த பேருந்து - 25 பேர் உடல்கருகி உயிரிழந்த சோகம்!

திடீரென பற்றி எறிந்த பேருந்து - 25 பேர் உடல்கருகி உயிரிழந்த சோகம்!

கோர சம்பவம்

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 43 பேர் உடல் கருகி பலி - பலர் படுகாயம்! | Building Fire Kills At Least 43 In Bangladesh

கட்டடத்தில் சிக்கித் தவித்த75 பேர் மீட்கப்பட்டனர் அதில், 22 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், 33 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாகவும்,11 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.