திடீரென பற்றி எறிந்த பேருந்து - 25 பேர் உடல்கருகி உயிரிழந்த சோகம்!
மகாராஷ்டிராவில் பேருந்து திடீரென கவிழ்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டு 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து
மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா என்ற பகுதியில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் டயர் வெடித்ததில், அந்த பேருந்தின் ஒட்டுநர் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.
இதனால் பேருந்து சாலையில் கவிழ்ந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட எஸ்.பி
இந்நிலையில், புல்தானா மாவட்ட எஸ்பி சுனில் கடசனே இந்த விபத்து குறித்து கூறுகையில், “தீ விபத்தில் சிக்கிய பேருந்தில் மொத்தம் 33 பேர் பயணம் செய்தனர். அதில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
பேருந்தின் டயர் வெடித்ததில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.