50 அடி பள்ளத்தில் சீறிப் பாய்ந்த அரசு பேருந்து விபத்து - அரணாக உயிர் காத்த மரங்கள்...!

Accident
By Nandhini Aug 16, 2022 06:22 AM GMT
Report

அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்து விபத்து

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பகுதியிலிருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அரசு பேருந்து பவர்ஹவுஸ் மலைப்பகுதியில் பேருந்து வந்துக்கொண்டிருந்தது. திடீரென்று அரசு பேருந்து கட்டுப்பட்டை இழந்ததால், சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தக்குள்ளானது.

உயிர் காத்த மரங்கள்

அரசு பேருந்து பள்ளத்தில் விழுந்தபோது, சாலையோரத்தில் இருந்த மரங்கள் பஸ்ஸை தடுத்ததால், பேருந்து 50 அடி ஆழத்தில் விழாமல் தப்பித்தது.

அரசு பேருந்தில் ஓட்டுநரும், நடத்துனரும் மட்டும் இருந்ததால் அசாம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக ஓட்டுநரும், நடத்துனரும் உயிர் பிழைத்தனர்.

இது குறித்து போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அரசு பேருந்தை பள்ளத்திலிருந்து எடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     

accident