காதலனுக்காக தங்கை செய்த செயல் - ஆத்திரத்தில் அண்ணன் வெறிச்செயல்!
தங்கையின் காதலனை அண்ணன் கொலை செய்துள்ளார்.
இன்ஸ்டா காதல்
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் விஜய்(25). இவர் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜெனிபர் சரோஜா(23) என்பவருடன் இன்ஸ்டாவில் பழகியுள்ளார். அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், காதலனோடு சேர்ந்து வாழ்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறிய ஜெனிபர் சரோஜா, கள்ளக்குறிச்சிக்கு விஜயின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, கணவரைப் பிரிந்து விஜயின் சகோதரி அங்கே வாழும் நிலையில் அந்த பிரச்சனை முடிந்த பின் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைப்பதாக கூறி சரோஜாவை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.\
அண்ணன் வெறிச்செயல்
இதற்கிடையில் சரோஜாவின் குடும்பத்தினர், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, ஜெனிபர் சரோஜா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், விஜயை திருநெல்வேலிக்கு வருமாறு சரோஜாவின் சகோதரர் புஷ்பராஜ் சிம்சன் அழைத்துள்ளார்.
அதன்படி, வந்த அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த பழைய கட்டிடப் பொருட்களைக் கொண்டு தாக்கியும், அரிவாளால் வெட்டியும் விஜய் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
உடனே தகவலறிந்து விரைந்த போலீஸார், புஷ்பராஜ் சிம்சன், அவரது நண்பர் சிவா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.