மாமியாருடன் அண்ணன் உல்லாசம்; ஆத்திரத்தில் தம்பி செய்த காரியம் - அதிர்ச்சி!
தனது மாமியாருடன் தகாத உறவில் இருந்த அண்ணனை, தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் கொலை
திருவள்ளூர் மாவட்டம் கே.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவரான சிவகுமார் (33). இவரை அவரது தம்பி தேவேந்திரன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஓட ஓட துரத்தி சென்று பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினார்.
இதில் சிவகுமார் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பி தேவேந்திரன் பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தம்பி கைது
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், எனது மாமியாருக்கும் சிவகுமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. பலமுறை கண்டித்தும் கள்ளக்காதலை அவர் விடவில்லை.
தொடர்ந்த எனது மாமியாருடன் தகாத உறவில் இருந்து வந்தனர். இதனால் ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அண்ணனை வெட்டி கொலை செய்ததாக தேவேந்திரன் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து தேவேந்திரனை கைது செய்த போலீசார், அவருடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நண்பர்களையும் தேடி வருகின்றனர்.