நண்பர்களுடன் கிரிக்கெட்; பந்து பட்டதும் விழுந்த சிறுவன் - இறுதியில் நேர்ந்த சோகம்!
பிறப்புறுப்பில் பந்து தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு
மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த லொஹேகன் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஷம்பு காலிதாஸ். இவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் "சிறுவன் தனது நண்பருக்கு பந்து வீசுகிறார்.
சிறுவன் உயிரிழப்பு
அப்போது நண்பர் அதனை அடிக்க, பந்து வேகமாக வந்து சிறுவனின் பிறப்புறுப்பை தாக்கியது. இதில் சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுகிறார். பின்னர் சில நொடிகளில் மேலே எழுந்த சிறுவன் நிற்க முடியாமல் மீண்டும் கீழே விழுகிறார். ஆனால், சிறுவன் மீண்டும் எழவில்லை.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு சென்ற சிறுது நேரத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனை விபத்தால் நேர்ந்த உயிரிழப்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.