திருந்தாத மனைவி; தனிமையில் உல்லாசம் - அண்ணனுக்கு பதில் தம்பி வெட்டிக் கொலை!
திருமணத்தை மீறிய உறவினால், அண்ணனுக்கு பதில் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தகாத உறவு
தூத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் வீட்டில் அரசு போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீடு புகுந்த ஒருவர், திடீரென பிரவீன் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.
இதில் பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் விரைந்து உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தம்பி வெட்டிக்கொலை
அதில், பிரவீன்குமாரின் சகோதரரான வினோத் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் மனைவி சக்தி என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.
இதனையறிந்த செல்லப்பா, தன் மனைவியை கண்டித்ததுடன் அங்கிருந்து ஏரல் பகுதிக்கு குடியேறியுள்ளார்.
இருப்பினும், இவர்களது பழக்கம் நீடித்து வந்துள்ளது. மேலும், இரவு செல்லப்பா வீட்டிற்கு வந்த போது செல்லப்பாவின் மனைவியுடன் வினோத் தனிமையில் இருந்துள்ளார். அவரைப் பார்த்ததும் வினோத் தப்பியோடியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பா, வினோத் என நினைத்து அவரது தம்பி பிரவீன்குமாரை வெட்டி கொலை செய்துள்ளார். தலைமறைவான செல்லப்பாவை போலீஸார் தேடி வருகிறார்கள்.