வினேஷ் போகத் ஜெயிச்சது சந்தோஷம்தான்..ஆனால், அழிவு - பகீர் கிளப்பிய பிரிஜ் பூஷன் சிங்!
தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
வினேஷ் போகத் வெற்றி
ஹரியானாவில் மொத்தம் 90 சீட்கள் உள்ளன. அங்குள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட யோகேஷ் குமாரை 6015 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங், "அவர் வென்றுள்ளாரா? ரொம்ப சந்தோஷம்.அதில் எனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை.
பிரிஜ் பூஷன் சர்ச்சை பேச்சு
ஆனால், ஒன்று வினேஷ் போகத் எங்குச் சென்றாலும் அழிவு ஏற்படும். வேறு எதுவும் மிச்சம் இருக்காத அளவுக்கு அளவு ஏற்படும். வேறு எதுவும் மிச்சம் இருக்காத அளவுக்கு அளவு ஏற்படும். இப்போது கூட பார்த்தீர்களா, காங்கிரஸ் அழிந்துவிட்டது. எக்ஸிட் போல் முடிவுகளில் கூட காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போகிறது என்று சொன்னார்கள்.
ஆனால், ஹரியானாவில் கருத்துக்கணிப்பு முற்றிலும் தவறானது. இப்போது அங்குத் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சியை அமைக்கிறது. அவர் முதலில் மல்யுத்த வீரர்களிடையே பேரழிவை ஏற்படுத்தினார். இப்போது காங்கிரஸ் கட்சிக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளார்” எனக் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராகத் தான் வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கடந்தாண்டு போராட்டத்தை நடத்தினர். இதன் காரணமாக பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.