மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப்பென் - கலெக்டர் வீட்டு கல்யாணத்தில் சுவாரஸ்யம்!

Marriage Viral Photos trichy
By Sumathi Oct 23, 2024 10:15 AM GMT
Report

மாப்பிள்ளைக்கு, மணப்பெண் மாங்கல்யம் கட்டிய சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மாப்பிள்ளைக்கு மாங்கல்யம்

திருவள்ளூர் துணை ஆட்சியர் செல்வமதி மற்றும் வெங்கடேசன் தம்பதி. திருச்சி, இந்தியன் வங்கி காலனியில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மருத்துவர் ஸ்வஐன்யா.

ஸ்வஐன்யா - முகேஷ்குமார்

இவரது திருமணம் முகேஷ்குமார் என்பவருடன் காட்டூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பில் ழங்கால இசைக் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், அவற்றை வாசிக்கும் முறை குறித்து அனைவருக்கும் செய்து காண்பிக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் ஆனால் வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் - எப்படி இப்படி!

ஒரே நேரத்தில் ஆனால் வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் - எப்படி இப்படி!

சுவாரஸ்ய நிகழ்வு

தொடர்ந்து, திருமணத்தில் மணமகளின் கழுத்தில் மணமகன் மாங்கல்யம் கட்டிய பின்னர், மணமகனின் கையில் மாங்கல்யம் கொண்டு செய்யப்பட்ட கைச்செயினை மணமகள் கட்டினார். மேலும், திருமணத்திற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும்,

மாங்கல்ய டிசைனில் கைசெயின்

விதைப்பந்துகள் வழங்கப்பட்டன. மரம் நடுதலின் அவசியத்தை எடுத்துக் கூறும் வகையில், "பனை விதை, மாநில விதை: மாநிலம் முழுவதும் அதை விதை " என அச்சிடப்பட்ட காகித பையில் அவை கொடுக்கப்பட்டது. தற்போது இந்த திருமண நிகழ்வுகள் கவனம் பெற்று வருகிறது.