ஒரே நேரத்தில் ஆனால் வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் - எப்படி இப்படி!
United States of America
Viral Photos
By Sumathi
பெண் ஒருவர் தனது இரட்டை குழந்தைகளை வெவ்வேறு வருடத்தில் பெற்றெடுத்துள்ளார்.
இரட்டை குழந்தை
அமெரிக்காவைச் சேர்ந்தவர் டெக்ஸாசில் காலி ஜோ ஸ்காட். இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. தனது முதல் பெண் குழந்தையான அன்னி ஜோவை டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 11:55 மணிக்கு பெற்றெடுத்தார்.
பின்னர் ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12:01 மணிக்கு தனது இரண்டாவது பெண் குழந்தையான எபி ரோஸைப் பெற்றெடுத்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவாரஸ்ய நிகழ்வு
பிறக்கும் போது இரு குழந்தைகளுக்கும் இடையேயான நேர வேறுபாடு 6 நிமிடங்கள் இருந்தாலும், முதல் குழந்தை துல்லியமாக 2022ம் ஆண்டிலும், இரண்டாவது குழந்தை 2023ம் ஆண்டிலும் பிறந்துள்ளன.
இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது.