மதுபோதையில் தள்ளாடி வந்த மணமகன் - மணமகள் செய்த காரியத்தை பாருங்க..
மது போதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது மணமகள் புகாரளித்துள்ளார்.
மது போதையில் மணமகன்
கேரளா, தடியூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்குள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திருமணத்தில் காரில் இருந்து இறங்கிய மணமகன் மது போதையில் தள்ளாடியபடி மணமேடை நோக்கி நடந்து வந்துள்ளார்.
நின்ற திருமணம்
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகள் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், உறவினர்களிடமும் சண்டை செய்துள்ளார். ஒருகட்டத்தில் மணமகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையில் இருவீட்டாரும் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர்.
உடனே, இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், மணமகளின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றுக் கூறி திருமணத்துக்காக செலவு செய்த தொகையை நஷ்டஈடாக தரவேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
தொடர்ந்து, நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் கொடுக்க மணமகன் வீட்டார் ஒப்புக் கொண்டனர்.
அதன்பின், மணமகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.