குடிபோதையில் நடுரோட்டில் தள்ளாடிய சிறுமி - போலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டி ரகளை!
சிறுமி ஒருவர் போதையில் போலீசாரிடம் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதை
பெங்களூரில், சர்ச் தெருவில் சிறுமி ஒருவர் தள்ளாடியபடியே அப்பகுதியில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசியிருக்கிறார். சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் ஏராளமான பப்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள நோ பார்க்கிங் பகுதியில் சிறுமி தனது காரை நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து சிறுமி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர் காவல்துறையினரை அவர் தாக்கியுள்ளார்.
போலீசை தாக்கிய சிறுமி
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றனர். அப்போது, போலீஸாரைப் பார்த்து தகாத வார்த்தைகளால் அந்த சிறுமி திட்டியுள்ளார். இதன் பின்னர் அங்கு பெண் போலீஸார் ஒருவரை அழைத்துவந்தனர்.
அவரையும் இந்த சிறுமி தள்ளிவிட ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக மற்றொரு பெண்ணின் உதவியோடு ஆட்டோவில் சிறுமியை ஏற்றி பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். இந்தியாக வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.